Andha vaanatha pola Lyrics - Chinna Gounder Lyrics



M: Andha vaanatha pola 
Manam padaicha 
Mannavanay 
Panithooliyai pola 
Kunam padaicha 
Thennavanay 

Manjalilay oru nooleduthu 

Vinnukum Mannukkum 
Sambandham undendru 
Sonnathu yaaru ? 
Adhu mannavan payru 


(andha) 


M: Maari pona podhum 
Idhu thayru pogum veedhi 
Vaari Vaari thoothum 
Ini yaaru unakku naadhi 

Paasam vaitha thaalay 
Nee payirai kaatha vayli 
Payiraik kaatha podhum 
Veen pazhiyai sumandha needhi 

Saami vandhu kaytidumaa ? 
Veen pazhiyai theethidumaa ? 

Vinnukum Mannukkum 
Sambandham undendru 
Sonnathu yaaru ? 
Adhu mannavan payru 

(andha) 


M: Nenjam ennum koodu 
Adhil neruppu vaithathaaru ? 
Thunbam vandha podhum 
Adhai thudaipathingu yaaru ? 

Kalangumbothu sayru 
Athu theliyum pothu neeru 
Kadavul pOtta kodu 
Adhai thirutha povadhaaru ? 

Vendha punnum aaridumaa ? 
Vaydhanai thaan theernthidumaa ? 

Vinnukum Mannukkum 
Sambandham undendru 
Sonnathu yaaru ? 
Adhu mannavan payru 

(andha)

----------------------------------------------------------------------------------------

ஆ: அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு? அது மன்னவன் பேரு

அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே

ஆ: மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி
வாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி?
பாசம் வைத்ததாலே நீ பயிரைக் காத்த வேலி
பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி
சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா?

விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு? அது மன்னவன் பேரு

அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே

ஆ: நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு?
துன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு?
கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு
கடவுள் போட்ட கோடு அதத் திருத்தப் போவதாரு?
வெந்த புண்ணும் ஆறிடுமா? வேதனை தான் தீர்ந்திடுமா?

விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு? அது மன்னவன் பேரு

ஆ: அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே

மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு? அது மன்னவன் பேரு

அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே.......