Mannil Intha Lyrics - Keladi Kanmani Lyrics



M: mannil intha kaadhalandri yaarum vaazhdhal koodumo,

ennam kanni paavaiyindri yezhu svaranthaan paadumo

penmai indri mannil inbam yethadaa

kannai moodi kanavil vaazhum maanidaa...


(mannil indha)


M: vennilavum ponninadhiyum kanniyin thunaiyindri

enna sugam ingu padaikkum penmayil sugamandri

thanthanamum sangaththamizhum pongidum vasanthamum

sindhivarum pongum amutham thandhidum kumuthamum

kannimagal aruge irundhaal suvaikkum

kanniththunai izhandhaal muzhuthum kasakkum

vizhiyinil mozhiyinil nadaiyinil udaiyinil

adhisaya sugamtharum anangival pirappidhuthaan...


(mannil intha)


M: muththumani raththinangalum kattiya pavazhamum

koththumalar arpudhangalum kuvintha atharamum

sitridaiyum sinna viralum villenum puruvamum

sutrivara cheyyum vizhiyum sundara mozhigalum

ennaivida maranthaal etharko piravi

iththanaiyum izhanthaal avanthaan thuravi

mudimudhal adivarai muzhuvathum sugamtharum

virunthugal padaiththidum arangamum avalallavaa...


(mannil intha)

---------------------------------------------------------------------------------------------------

ஆ: மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

(மண்ணில் இந்த)

ஆ: வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அனங்கிவல் பிறப்பிதுதான்.......

(மண்ணில் இந்த)

ஆ: முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும்  அவளல்லவா....

(மண்ணில் இந்த)