Innisai Paadivarum Lyrics - Thulladha Manamum Thullum Lyrics



M: Innisai paadivarum ilangaatrukku 
uruvamillai,

kaatralai illaiyenraal oru paattoli 
ketpathillai,
oru gaanam varugaiyil ullam kollai 
poguthey,
aanaal kaatrin mugavari kangal 
arivathillaiye,
intha vaazhkkaiye oru thedalthaan 
athai thedi thedi thedum manasu 
tholaigirathey,

M: innisai paadivarum ilangaatrukku 
uruvamillai,
kaatralai illaiyenraal oru paattoli 
ketpathillai...


M: kan illaiyenraalo niram paarkka
mudiyaathu,
niram paarkkum un kannai nee paarkka
mudiyaathu,
kuyilisai pothume ada kuyil mugam 
thevaiyaa,
unarvugal pothume athan uruvam 
thevaiyaa,
kannil kaatchi thondrivittaal karpanai 
theernthuvidum 
kannil thondraa kaatchiyil thaan karpanai 
valarnthuvidum 
aada paadal pola thedal kooda oru sugame...

M: innisai paadivarum ilangaatrukku 
uruvamillai 
kaatralai illaiyenraal oru paattoli 
ketpathillai...


M: uyir ondru illaamal udal ingu 
nilaiyaathey 
uyir enna porul endru alai paainthu
thiriyaathey,
vaazhkkaiyin vergalo miga ragasiyamaanathu 
ragasiyam kaanbathey nam avasiyamaanathu,
thedal ulla uyirgalukke dhinamum 
pasiyirukkum,
thedal enbathu ullavarai vaazhvil 
rusiyirukkum, 
aada paadal pola thedal kooda oru sugame...


M: innisai paadivarum ilangaatrukku 
uruvamillai,
kaatralai illaiyenraal oru paattoli 
ketpathillai,
oru gaanam varugaiyil ullam kollai 
poguthey,
aanaal kaatrin mugavari kangal 
arivathillaiye,
intha vaazhkkaiye oru thedalthaan 
athai thedi thedi thedum manasu 
tholaigirathey,

M: innisai paadivarum ilangaatrukku 
uruvamillai,
kaatralai illaiyenraal oru paattoli 
ketpathillai...

----------------------------------------------------------------------------------------------------------------

ஆ: இன்னிசை பாடிவரும் இளம் 
காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு 
பாட்டொலி கேட்பதில்லை,
ஒரு காணம் வருகையில் உள்ளம் 
கொள்ளை போகுதே,
ஆனால் காற்றின் முகவரி 
கண்கள் அறிவதில்லையே,
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனது 
தொலைகிறதே,

ஆ: இன்னிசை பாடிவரும் இளம் 
காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு 
பாட்டொலி கேட்பதில்லை....


ஆ: கண் இல்லையென்றாலோ 
நிறம் பார்க்கமுடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை 
நீ பார்க்கமுடியாது
குயிலிசை போதுமே அட 
குயில் முகம் தேவையா,
உணர்வுகள் போதுமே அதன் 
உருவம் தேவையா,
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் 
கற்பனை தீர்ந்துவிடும்,
கண்ணில் தோன்றா காட்சியில் 
தான் கற்பனை வளர்ந்துவிடும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே,

ஆ: இன்னிசை பாடிவரும் இளம் 
காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு 
பாட்டொலி கேட்பதில்லை....


ஆ: உயிர் ஒன்று இல்லாமல் உடல் 
இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று 
அலைபாய்ந்து திரியாதே,
வாழ்க்கையின் வேர்கலோ 
மிக ரகசியமானது,
ரகசியம் காண்பதே நம் அவசியமானது,
தேடல் உள்ள உயிர்களுக்கே 
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை 
வாழ்வில் ருசியிருக்கும்,
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே,

ஆ: இன்னிசை பாடிவரும் இளம் 
காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு 
பாட்டொலி கேட்பதில்லை,
ஒரு காணம் வருகையில் உள்ளம் 
கொள்ளை போகுதே,
ஆனால் காற்றின் முகவரி கண்கள் 
அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனது 
தொலைகிறதே,

ஆ: இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு 
உருவமில்லை,
காற்றலை இல்லையென்றால் ஒரு 
பாட்டொலி கேட்பதில்லை....