Wednesday, July 6, 2016

Oh Priya Priya - Idhayaththai Thirudathey




ஆ: ஆஆ.ஆஆ..ஆஆ..................................ம்ம்ம்மம்மம்ம்ம்ம்

ஆ: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓரோரம்
கானல் நீரால் தாகம் தீராது


பெ: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் நமது
தேவன் நீதான் போனால் விடாது,

ஆ: தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி....


 
பெ: அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ,

 
ஆ: ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ,

 
 பெ: எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
 
ஆ: எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
 
 பெ: கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா...

ஆ: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
 
பெ: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

 
பெ: காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராச லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே,
 
ஆ: ஷாஜஹானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது,

 
பெ: இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
 
ஆ: அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
 
பெ: விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா.....


ஆ: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
 
பெ: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஆ: ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
 
பெ: நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்............

Saturday, July 2, 2016

Anbe Anbe Nee En Pillai - Uyirodu Uyiraga







பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை
 தேகம் மட்டும் காதல் இல்லை
 பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
 பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

 
 பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை
 தேகம் மட்டும் காதல் இல்லை

 
 பெ: கண்ணா என் கூந்தலில் சூடும் 

 பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க
 
ஆ: கண்ணே உன் கைவளை மீட்டும் 
 சங்கீதங்கள் என்னை என்னை உரைக்க
 
பெ: கண்களைத் திறந்து கொண்டு 
  நான் கனவுகள் காணுகிறேன்
 
ஆ: கண்களை மூடிக்கொண்டு 
 நான் காட்சிகள் தேடுகிறேன்
 
பெ: உன் பொன் விரல் தொடுகையிலே 
 நான் பூவாய் மாறுகிறேன்
 
 ஆ: பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்,
 

பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை
 தேகம் மட்டும் காதல் இல்லை,

 
 

 ஆ: யாரும் சொல்லாமலும் ஓசை 
 இல்லாமலும் தீயும் பஞ்சும் நெருங்க
 
பெ: யாரைப் பெண் என்பது யாரை 
 ஆண் என்பது ஒன்றில் ஒன்று அடங்க
 
ஆ: உச்சியில் தேன் விழுந்து 
 என் உயிருக்குள் இனிக்குதடி
 
பெ: மண்ணகம் மறந்து விட்டேன் 
 எனை  மாற்றுங்கள் பழையபடி
 
ஆ: உன் வாசத்தை சுவாசிக்கிறேன் 
 என் ஆயுள் நீளும்படி,
 
 பெ: பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்,
அன்பே அன்பே நீ என் பிள்ளை
 தேகம் மட்டும் காதல் இல்லை
 
ஆ: பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
 
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்,

Friday, July 1, 2016

Andhamaanai Paarungal Azhagu - Andhamaan Kadhali






பெ: அந்த மானை பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு!
அந்த மானை பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு!
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த
தீவில் பெண் தூவும் பன்னீர்
அந்த மானை பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு!

ஆ: இந்த மேகக் கூந்தல் கலைகள்-கடல்
நீரில் ஆடும் அலைகள்
இந்த மேகக் கூந்தல் கலைகள்-கடல்
நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோக ராக நாதம்-இந்த
ஏழை பாடும் வேதம்!
அந்தமானும் உன் போல அழகு இளம்
பாவை உன்னோடு உறவு அந்த
தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த
காதல் பெண் தூவும் பன்னீர்


பெ: அந்த மானை பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு!
 

பெ: நல்ல பூவும் தேனும் திரண்டு-சுகம்
பொங்கும் உள்ளங்கள் இரண்டு,
இது ராஜ யோகா சொர்க்கம்-இனி
பேச என்ன வெட்கம்,
அந்த மானை பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு!

ஆ: இது ஏக்கம் தீர்க்கும் தனிமை-என்ன
இன்பம் அம்மா உன் இளமை-இந்த
தேவி மேனி மஞ்சள்-நான்
தேடி ஆடும் ஊஞ்சல்,


பெ: உங்கள் கைகள் என்ற சிறையில்-வரும்
கால காலங்கள் வரையில்-நான்
வாழவேண்டும் உலகில் -அந்த
மானைப்போல அருகில்...
அந்த மானை பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு,
அந்த மானை பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு...

Wednesday, April 13, 2016

Kaatre Kaatre Un Moonkil - J.C.Daniel Movie

                           
 ஆ: காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில்
கீதம் இசைப்பதென்ன,
கீதம் இசைப்பதென்ன,
வேனிற் காலங்கலும் வேனு கானமும்
தோகை விரிப்பதென்ன
தோகை விரிப்பதென்ன,


பெ: மேகம் மேகம் அது போகும் வழிகளில்
நெஞ்சம் மிதப்பதென்ன,
பூட்டி வைத்த ஒரு பூவின் கதவுகள்
காற்றில் திறப்பதென்ன
காற்றில் திறப்பதென்ன,



ஆ: நேற்று என்பது வெறும் கனவு
இன்று என்பது புது நினைவு
சோகம் சுமந்த தோள்களிலே
சாய்ந்திட வருதே வெண்ணிலவு,
முட்டி முட்டி பால் குடிக்கும்
கன்னுக்குட்டி செல்லங்களும்,
குட்டி குட்டி பூக்களிலே தொட்டில்
கட்டும் தென்றல்களும்,
காதில் தேன்மொழி சொல்கிறதே,
காற்றே காற்றேயே.............

பெ:  காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில்
கீதம் இசைப்பதென்ன,
வேனிற் காலங்கலும் வேனு கானமும்
தோகை விரிப்பதென்ன
தோகை விரிப்பதென்ன,
பெ: ஆ...ஆ...ஆ....ஆ...ஆ.....ஆ...

ஆ; அழகிய வானம் திறக்கிறது
ஆயிரம் கிளிகள் பறக்கிறது,
பழகிய கிளிகள்  கிழக்கினிலே
வானவில் ஒன்று வரைகிறது,
மின்மினியின்  கண்களிலே
நட்சத்திரம் பூக்கிறதே,
கிண்கிணியின் சந்தங்களில்
கீர்த்தனங்கள் கேட்கிறதே,
நேரம் வந்தது பூவாக....

ஆ; காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில்
கீதம் இசைப்பதென்ன,
வேனிற் காலங்கலும் வேனு கானமும்
தோகை விரிப்பதென்ன,

பெ: மேகம் மேகம் அது போகும் வழிகளில்
நெஞ்சம் மிதப்பதென்ன,
பூட்டி வைத்த ஒரு பூவின் கதவுகள்
காற்றில் திறப்பதென்ன
காற்றில் திறப்பதென்ன,

ஆ: தோகை விரிப்பதென்ன,
தோகை விரிப்பதென்ன......