Yaarukkaaga idhu yaarukkaaga Lyrics - Vasantha Maalgai Lyrics



M: yaarukkaaga… ithu yaarukkaaga..
intha maaligai vasantha maaligai
kaadhaloviyam kalaintha maaligai
yaarukkaaga… ithu yaarukkaaga..
intha maaligai vasantha maaligai
kaadhaloviyam kalaintha maaligai
yaarukkaaga… ithu yaarukkaaga..
kaathale…po..po..
saathale…vaa..vaa..

M: maranam ennum thoothu vanthathu
athu mangai ennum vadivil vanthathu,
maranam ennum thoothu vanthathu
athu mangai ennum vadivil vanthathu
sorgamaaga naan ninaiththathu
intru naragamaaga maarivittathu
yaarukkaaga… ithu yaarukkaaga..

M: malaraithaane naan parithathu
kai mullin meethu yen vizhunthathu
uravaithaane naan ninaithathu
ennai pirivu vanthu yen azhaithathu..

(ezhuthungal en kallaraiyil aval irakkamillathaval endru
paadungal en kallaraiyil ivan paithiyakkaaran endru..ha.ha.ha.)

M: kangal theettum kaadhal enbathu
athu kannil neerai varavalaippathu
pengal kaattum anbu enbathu
nammai pithanaakki alaiya vaippathu…yaarukkaagaa…

M: engirunthu sontham vanthathu
ingu engirunthu nanju vanthathu,
engirunthu sontham vanthathu
ingu engirunthu nanju vanthathu,
angirunthu aattugintravan
thinam aadugintra naadagam ithu...

M: yaarukkaaga… ithu yaarukkaaga..
intha maaligai vasantha maaligai
kaadhaloviyam kalaindha maaligai
yaarukkaaga… ithu yaarukkaaga..

-------------------------------------------------------------------

ஆ: யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக...
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை,
காதலே போ.... போ....
சாதலே வா வா....

ஆ: மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்தது
இன்று நரகமாக மாறிவிட்டது.....
யாருக்காக.....இது யாருக்காக.....

ஆ: மலரைத்தானே நான் பறித்தது,
கை முள்ளின் மீது ஏன் விழுந்தது,
உறவை தானே நான் நினைத்தது
என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது....

ஆ: எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரன் என்று ஹ ஹ ஹ......


ஆ: கண்கள் தீண்டும் காதல் என்பது
அது கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது
நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது,
யாருக்காக.................ஹஹஹா,,,,,,

ஆ: எங்கிருந்து சொந்தம் வந்தது 
இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது,
எங்கிருந்து சொந்தம் வந்தது 
இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது,
அங்கிருந்து ஆட்டுகின்றவன் 
தினம் ஆடுகின்ற நாடகம் இது.....

ஆ: யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக...
யாருக்காக.......................................