Vaigaraiyil Vaigaikaraiyil Lyrics - Payanangal Mudivathillai Lyrics



M: vaigaraiyil vaigaikkaraiyil vanthaal 
varuven un arugil,
un ninaivil nenjam vaan veliyil 
naalum nadaththum oorvalangal...

(vaigaraiyil)

M: un ninaive enakkor surudhi 
un kanave enakkor kiruthi
un unarvil maname urugi 
vaaduthammaa malar pol karugi
pala pala jenmam naan eduppen 
paadalgal kodi naan padippen
anbe unakke kaaththiruppen...aaa...

(vaigaraiyil)

M: aayiram aayiram aasaigalai 
aasaiyil unnidam pesa vanthen
aaviyil meviya sethigalai 
kelena nenjidam koora vanthen
ninaivugal engo maraigirathey 
kanavugal yeno kalaigirathey
nizhal pol unnai thodargirathey...aaa...

(vaigaraiyil) 

----------------------------------------------------------------------------------

ஆ: வைகறையில்  வைகைக்கரையில்  வந்தால்  
வருவேன்  உன்  அருகில் 
உன்  நினைவில்  நெஞ்சம்  வான்  வெளியில் 
நாளும்  நடத்தும்  ஊர்வலங்கள்..... 

(வைகறையில் )

ஆ: உன்  நினைவே  எனக்கோர்  சுருதி  
உன்  கனவே  எனக்கோர்  கிருதி 
உன் உணர்வில் மனமே உருகி  
வாடுதம்மா  மலர்  போல்  கருகி 
பலப் பல ஜென்மம் நான் எடுப்பேன் 
பாடல்கள் கோடி நான் படிப்பேன் 
அன்பே  உனக்கே  காத்திருப்பேன் ...ஆ ...

(வைகறையில் )

ஆ: ஆயிரம்  ஆயிரம்  ஆசைகளை  
ஆசையில்  உன்னிடம்  பேச  வந்தேன் 
ஆவியில்  மேவிய  கேள்விகளை  
கேளென நெஞ்சிடம் கூற  வந்தேன் 
நினைவுகள் எங்கோ மறைகிறதே  
கனவுகள்  ஏனோ  கலைகிறதே 
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே ...ஆ ..

(வைகறையில் )