Vasamilla Malar Ithu Lyrics - Oru Thalai Raagam Lyrics



M: Vaasamillaa malarithu hahahaa...
vasanthaththai theduthu,
vaasamillaa malarithu vasanthaththai 
theyduthu,
vaigai illaa madhurai idhu,
meenaakshiyai theduthu,
yethetho raagam ennaalum paadum 
azhaiyaathaar vaasal thalai vaiththu odum... 

M: vaasamillaa malarithu vasanthaththai 
theduthu...


M: paattukkoru raagam yetri varum pulavaa 
unakken aasai nilavaval mele, 
metti varum veenai sottavillai thenai 
unakken aasai kalaimagal pole,
metti varum veenai sottavillai thenai 
unakken aasai kalaimagal pole...

M: vaasamillaa malarithu vasanthaththai 
theduthu... 

M: enna sugam kandaai indru varai thodarnthu 
unakken aasai rathiyaval mele,
vanji aval unnai ennavillai indrum 
unakken aasai manmathan pole,
vanji aval unnai ennavillai indrum 
unakken aasai manmathan pole...

M: vaasamillaa malarithu vasanthaththai 
theduthu... 

M: maathangalai enna pannirandu varalaam 
unakken aasai melondru kootta,
maadhu thannai ariya kannirandum poiye 
unakken aasai uravendru naada, 
maadhu thannai ariya kannirandum poiye 
unakken aasai uravendru naada...

M: vaasamillaa malarithu vasanthaththai 
theyduthu,
vaigai illaa madhurai idhu,
meenaakshiyai theduthu,
yethetho raagam ennaalum paadum 
azhaiyaathaar vaasal thalai vaiththu odum... 

M: vaasamillaa malarithu vasanthaththai 
theduthu... 

------------------------------------------------------------------------------------------------------------

ஆ: வாசமில்லா மலரிது... ஹஹஹா.. 
வசந்தத்தைத் தேடுது,
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

ஆ: வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது....


ஆ: பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே,
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே,
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே....

ஆ: வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது....


ஆ: என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே,
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே,
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே.....

ஆ: வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது


ஆ: மாதங்களில் எண்ண பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட,
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட,
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட.....

ஆ: வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது,
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்.....

ஆ: வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது....