Vidu Kathaiya Lyrics - Muthu Lyrics



M: Vidukathaiyaa indha vaazhkkai.. 
vidai tharuvaar yaaro,
enathu kai ennai adippathuvo
enathu viral kannai keduppathuvo,
azhuthu ariyaatha en kangal, 
aaru kulamaaga maaruvatho,
yenendru ketkavum naathiyillai 
yezhaiyin needhikku kan undu paarvaiyillai. 
pasuvinai paambendru saatchi solla mudiyum 
kaambinil visham enna karakkavaa mudiyum.. 
pasuvinai paambendru saatchi solla mudiyum 
kaambinil visham enna karakkavaa mudiyum.. 
udambil vazhinthodum uthiram unai ketkum 
naan seitha theengu enna... naan seitha 
theengu enna...

M: vidukathaiyaa indha vaazhkkai.. 
vidai tharuvaar yaaro... 


M: vanthu vilukinra mazhaithuligal
entha idam serum yaar kandaar,
manithar kondaadum uravugalo
entha manam serum yaar kandaar,
mazhaithanil thondruthu gangai nathi
athu kadal sentru servathu kaala vithi,
ivanukku ival endru ezhuthiya kanakku
kanakkugal puriyaamal kanavukkul vazhakku,
ivanukku ival endru ezhuthiya kanakku
kanakkugal puriyaamal kanavukkul vazhakku,
uravin maaraattam urimai poraattam
irandum theervatheppo.....
irandum theervatheppo.....

M: vidukathaiyaa indha vaazhkkai.. 
vidai tharuvaar yaaro... 

M: unadhu rajangam idhuthaane 
odhunga koodaathu nallavane,
thondugal seiya neeyirunthaal 
thollai nerathu thooyavane, 
kaigalil pon alli nee koduthaai,
indru Kangalil kanneer yen koduthaai.. 
kaaviyangal unai paada kaathirukkum pozhuthu,
kaaviyudai nee kondaal ennavaagum manathu,
kaaviyangal unai paada kaathirukkum pozhuthu,
kaaviyudai nee kondaal ennavaagum manathu,
vaazhvai nee thedi vadakke nee ponal, 
naangal povathenge... naangal povathenge...

-------------------------------------------------------------------------------------------------------

ஆ: விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
எனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல் 
கண்ணைக் கெடுப்பதுவோ,
அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ,
ஏனென்று கேட்கவும் நாதியில்லை ஏழையின் நீதிக்குக் 
கண்ணுண்டு பார்வையில்லை,
பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும் காம்பினில் 
விஷம் என்ன கறக்கவா முடியும் 
பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும் காம்பினில் 
விஷம் என்ன கறக்கவா முடியும்,
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக்கேட்கும்
நான் செய்த பாவம் என்ன,....
நான் செய்த பாவம் என்ன,....

ஆ: விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
வந்து விழுகின்ற மழைத்துளிகள் எந்த இடம் 
சேரும் யார் கண்டார்,
மனிதர் கொண்டாடும் உறவுகலோ எந்த மனம் 
சேரும் யார் கண்டார்,
மலைதனில் தோன்றுது கங்கை நதி அது கடல் சென்று 
சேர்வது காலன் விதி,
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் 
கனவுக்குள் வழக்கு,
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் 
கனவுக்குள் வழக்கு,
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ....
இரண்டும் தீர்வதெப்போ....

ஆ: விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
உனது ராஜங்கம் இதுதானே ஒதுங்கக்கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீயிருந்தால் தொல்லை நேராது தூயவனே
கைகளில் பொன்னள்ளி நீ கொடுத்தாய் இன்று கண்களில் 
கண்ணீரை ஏன் கொடுத்தாய்,
காவியங்கள் உனைப்பாடக் காத்திருக்கும்பொழுது காவியுடை 
நீ கொண்டால் என்னவாகும் மனது,
காவியங்கள் உனைப்பாடக் காத்திருக்கும்பொழுது காவியுடை 
நீ கொண்டால் என்னவாகும் மனது,
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே......
நாங்கள் போவதெங்கே......