Onnukkonnu Lyrics - Nandhlalaalaa Lyrics


M: Onnukkonnu thunai irukkum ulagaththula
anbu onnu thaan anaadhaiyaa
anbu onnu thaan anaadhaiyaa (Onnu)
 
Yaaru idha kanduk kolvaar
sondham solla yaar varuvaar
anbukku yaar anbu seivaar
anbukku yaar anbu seivaar (Onnu)
 
M: Unnai pOla enai enni naan  
nenjil gangai aarOdumey
thunbam theerkka neelum kaigalil
sorkkam vandhu kai kOrkkumey
kOyil kulam yaavum ingey
anbin adaiyaalamallavaa
eazhaikkendru thanthadhellaam
eesan kaiyil searmallavaa
kangal illaa manidharukku kaalgal en naam nadandhaal
nam boomiyil anaadhaiyaar anaadhayaar(Onnu)
 
M: Mannil thaaney ellaikkOdugal
manadhil kOdu yaar pOttadhu
petraal thaanaa pilla boomiyil
ellaam ellaam nam paarvaiyil  
naadhiyatra poovum illai nattu vaiththaal vandhadhu
naadhiyatraa naam pirandhOm annaiyindry yaar vandhadhu
engirundhO ingu vandhOm
vandhadhellaam sonthangaley
nam boomiyil anaadhaiyaar anaadhaiyaar (Onnu)

--------------------------------------------------------------------------------------

ஆ: ஒன்னுக்கொன்னு துணை இருக்கும் உலகத்துல
அன்பு ஒன்னுதான் அநாதையா
அன்பு ஒன்னுதான் அநாதையா (ஒன்னு)
 
யாரு இதக்கண்டுச்சொல்வார்
கைகளிலே ஏந்திக் கொள்வார்
சொந்தம் சொல்ல யார் வருவார்
அன்புக்கு யார் அன்பு செய்வார் (ஒன்னு)
 
ஆ: உன்னைப் போல என்னை எண்ணி நான்
நெஞ்சில் கங்கை ஆறோடுமே
துன்பம் தீர்க்க நீளும் கைகளில்
சொர்க்கம் வந்து கை கோர்க்குமே
கோயில் குளம் யாவும் இங்கே
அன்பின் அடையாளமல்லவா
ஏழைக்கென்று தந்ததெல்லாம்
ஈசன் கையில் சேருமல்லவா
கண்கள் இல்லா மனிதருக்கு கால்கள் என நாம் நடந்தால்
நம் பூமியில் அநாதையார் அநாதையார் (ஒன்னு)
 
ஆ: மண்ணில் தானே எல்லைக்கோடுகள்
மனதில் கோடு யார் போட்டது
பெற்றால் தானா பிள்ளை பூமியில்
எல்லாம் எல்லாம் நம் பார்வையில்
நாதியற்ற பூவும் இல்லை நட்டு வைத்ததால் வந்தது
நாதியற்ற நாம் பிறந்தோம் அன்னையின்றி யார் வந்தது
எங்கிருந்தோ இங்கு வந்தோம்
வந்ததெல்லாம் சொந்தங்களே
நம் பூமியில் அநாதையார் அநாதையார் (ஒன்னு)