Un vizhiyil veezhndhadhu Lyrics - Poriyaalan Lyrics


M: Un vizhiyil veezhndhadhu yen sollidavaa
oru nodiyil…. maariyadhai sollidavaa
yaarum unnai poala illaiye
endru solludhey en manam sagiye
kaadhal enbadhu ennaiyum kaavu kondadhey ippadi
vazhi thaangavaa uyir vaangavaa (Un vizhi)
 
Kaagidhathiley kappal
seivadhai paarthirukkireney nee kangalaal
enna moozhga seivadhai kaadhal engireney
yaaridathilum unnai patriye pesugireney
nee pesu endradhum
vaarthaiyindri naan thaththalikkireney
kaalangal maarum endru munnaaley solveney
neeye en kaalam endraal maaraatheyenbeney
yedhedho mayakkam thannaaley
enakkum thondriyadhey idhu kaadhal noaithaaney   (Un vizhi)
 
Kaal nadandhida veedu vandhidum munbu nambineney
un kaalil ulladhey endhan veedena
indru solgireney
thaai idathiley undu anbunnaa munbu
nambineney un kaadhal paarvaiyil neeyum
thaayena vaadham seigireney
pear alaigal vandhaal kooda aadaamal nirppeney
anbey un kangal pattu aadiponeney
yedhedho mayakkam thannaaley
enakkum thondriyadhey idhu kaadhal noaithaaney   (Un vizhi)

-------------------------------------------------------------------------------------------------------

ஆ: உன் விழியில் வீழ்ந்தது ஏன் சொல்லிடவா
ஒரு நொடியில்… மாறியதை சொல்லிடவா
யாரும் உன்னை போல இல்லையே
என்று சொல்லுதே என் மனம் சகியே
காதல் என்பது என்னையும் காவு கொண்டதே இப்படி
வழி தாங்கவா உயிர் வாங்கவா (உன் விழி)
 
காகிதத்திலே கப்பல்
செய்வதை பார்த்திருக்கிறேனே நீ கண்களால்
என்னை மூழ்க செய்வதை காதல் என்கிறேனே
யாரிடத்திலும் உன்னை பற்றியே பேசுகிறேனே
நீ பேசு என்றதும்
வார்த்தையின்றி நான் தத்தளிக்கிறேனே
காலங்கள் மாறும் என்று முன்னாலே சொல்வேனே
நீயே என் காலம் என்றால் மாறாதேயென்பேனே
ஏதோ ஏதோ மயக்கம் தன்னாலே
எனக்கும் தோன்றியதே இது காதல் நோய்தானே (உன் விழி)
 
கால் நடந்திட வீடு வந்திடும் முன்பு நம்பினேனே
உன் காலில் உள்ளதே எந்தன் வீடென
இன்று சொல்கிறேனே
தாய் இடத்தில் உண்டு அன்புன்னா முன்பு
நம்பினேனே உன் காதலர் பார்வையில் நீயும்
தாயென வாதம் செய்கிறேனே
பேர் அலைகள் வந்தால் கூட ஆடாமல் நிற்ப்பேனே
அன்பே உன் கண்கள் பட்டு ஆடிப்போனேனே
ஏதோ ஏதோ மயக்கம் தன்னாலே
எனக்கும் தோன்றியதே இது காதல் நோய்தானே (உன் விழி)