Ennavale Adi Ennavale Lyrics - Kadhalan Lyrics



M: ennavale adi ennavale
enthan idhayaththai tholaiththu vitten
entha idam athu tholaintha idam
antha idaththaiyum maranthu vitten - unthan
kaal kolusil athu tholainthathenru unthan
kaaladi thedi vanthen
kaadhalenraal perum avasthaiyenru unnai
kandathum kandu konden enthan
kazhuththu varai enthan kaadhal vanthu iru
kanvizhi pidhungi ninren...


(ennavalle)


M: vaaymozhiyum enthan thaaymozhiyum indru vasappadavillaiyadi
vayitrukkum thondaikkum uruvamillaathoru urundayum uruluthadi
kaaththirunthaal ethir paarththirunthaal oru nimishamum varusamadi
kangalellaam ennai paarppathupol oru kalakkamum thonruthadi - ithu
sorgamaa naragamaa solladi ullapadi - naan
vaazhvathum vidaikondu povathum unthan
vaarththaiyil ullathadi...

(ennavalle)

M: gokilame nee kural koduththaal unnai kumpittu kannadippen
gopurame unnai saaiththukkondu unthan koondhalil meen pidippen
vennilavae unaith thoongavaikka undhan viralukku sodukkeduppen
varudavarum poongaatrai ellaam konjam vadikatti anuppivaippen - en
kaadhalin thevaiyai kaathukkul odhivaippen  un
kaaladi ezhudhiya koalangal pudhuk
kavithaigal enruraippen...

(ennavalle)

--------------------------------------------------------------------------------------------------------------


ஆ: என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் எந்தன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்.......

(என்னவளே)

ஆ: வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டயும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி - இது
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி.....

(என்னவளே)

ஆ: கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் - என்
காதலின் தேவயை காதுக்குள் ஓதிவைப்பேன் - உன்
காலடி எழுதிய கோலங்கள் புதுக்
கவிதைகள் என்றுரைப்பேன்.....

(என்னவளே)