Yen enra kelvi Lyrics - Puthiya Paravai Lyrics



M: Yen enra kelvi inru ketkaamal vaazhkkai illai
naan enra ennam konda manithan vaazhnthathillai
Yen enra kelvi inru ketkaamal vaazhkkai illai
naan enra ennam konda manithan vaazhnthathillai

paguththarivu piranthathellaam kelvigal kettathanaale (2)
urimaigaLai peruvathellaam unarchchigal ullathanaale (2)

Yen enra kelvi………..

(kaalaa kaalaththukkum ippadiye uzhaichchikkitte irunthu
intha kanniththeevu mannukke eruvaaga vendiyathu thaanaa?
namma sontha uurukku pOvathu eppO?
puLLa kutti mugaththai paakkurathu eppO?
innum eththanai naalukku thaan porumaiyaa irukkurathu?)

M: Oraayiram aandugal aagattume nam porumaiyin porul mattum vilanggattume (2)
varunggaalaththile nam parambaraigal naam adimai illai enru muzhanggattume (2)

Yen enra kelvi

(poonkodi seekkirame intha theevu sorkka puri aagividum pOla irukkirathu.
ellaam intha adimaigalin uzhaippaal thaane?
santhegamenna ? namakku vaayththa adimaigal miga miga thiramaisaaligal.
aanaal vaai thaan kaathu varai irukkirathu.)

M: niirOdaigal kOdaiyil kaainthirukkum
mazhaikaalaththil vellanggaL paaynthirukkum
nam thOl valiyaal antha naal varalaam
anru yezhai eliyavargal nalam peralaam
munnetram enbathellaam uzhaippavar uzhaippathanaale
kadamaigalai purivathellaam viduthalai venduvathaale...

Yen enra kElvi

----------------------------------------------------------------------------------------

ஆ: ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே (2)
உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே (2)

ஏன் என்ற கேள்வி

(காலா காலத்துக்கும் இப்படியே உழைச்சிக்கிட்டே இருந்து
இந்த கன்னித்தீவு மண்ணுக்கே எருவாக வேண்டியது தானா?
நம்ம சொந்த ஊருக்கு போவது எப்போ?
புள்ள குட்டி முகத்தை பாக்குறது எப்போ?
இன்னும் எத்தனை நாளுக்கு தான் பொறுமையா இருக்குறது?)

ஆ: ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே (2)
வருங்காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே (2)

ஏன் என்ற கேள்வி

(பூங்கொடி சீக்கிரமே இந்த தீவு சொர்க்க புரி ஆகிவிடும் போல இருக்கிறது.
எல்லாம் இந்த அடிமைகளின் உழைப்பால் தானே?
சந்தேகமென்ன ? நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்.
ஆனால் வாய் தான் காது வரை இருக்கிறது.)

ஆ: நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழைகாலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே

ஏன் என்ற கேள்வி