Sindhiya Venmani Lyrics - Poonthotta Kavalkaran Lyrics



M: sindhiya venmani sippiyil muthachchu en kannamaa 
sennira meniyil en manam pithachchcu en ponnammaa 
selaadum kannil paaloorum neram 
sevvaanam engum pon thoovum kolam... 

(Sindhiya)

M: penennum veetil nee seidha yaagam 
kan moodi paarthen engum inbam 

F: anbennum aatril neeraadum neram 
anngangal yaavum innum ennum 

M: indraikkum endraikkum nee enthan pakkaththil 

F: inbathai varnikkum ennullam sorkkaththil 

M: melliya noolidai vaadiyathey 
manmadha kaaviyam odiyathey 

Both: alliyum killiyum aayiram aasaigal 
anbennum keerththanai paadiyathey...

(sindhiya)

M: thaai thanththa paasam thanthai un veeram 
sei kolla vendum anbe anbe 

F: kaalangal pottrum kaithannthu kaakkum 
en pillai thannai inge inge 

M: veettukkum naattukkum naan paadum paattukkum 

F: eththikkum thithikkum en inba kootukkum 

M: en magan kaaviya naayagane 
en uyir desathu kaavalane 

Both: vaadiya boomiyil kaarmugilaai mazhai thoovidum 
maanudan en magane...

(sindhiya)

-----------------------------------------------------------------------------------------------------------

ஆ: சிந்திய  வெண்மணி  சிப்பியில்  முத்தாச்சு  என் கண்ணம்மா  
செந்நிற  மேனியில்  என்  மனம்  பித்தாச்சு  என்  பொண்ணம்மா  
சேலாடும்  கண்ணில்  பாலூறும்  நேரம்   
செவ்வானம்  எங்கும்  பொன்  தூவும்  கோலம்.....

(சிந்திய)   

ஆ: பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்  
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்,

பெ: அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்  
அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்,  

ஆ: இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்  

பெ: இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்  

ஆ: மெல்லிய நூலிடை வாடியதே  
மன்மத காவியம் ஓடியதே,

இருவரும்: அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்  
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே......   

(சிந்திய)

ஆ: தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம் 
சேய்  கொள்ள வேண்டும் அன்பே அன்பே 

பெ: காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்  
என்  பிள்ளை தன்னை இங்கே இங்கே  

ஆ; வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்  

பெ: எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்  

ஆ; என் மகன் காவிய நாயகனே  
என்  உயிர்  தேசத்து  காவலனே,

இருவரும்: வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்  
மானுடன் என் மகனே...

(சிந்திய)