Budhthan Yesu Gandhi Lyrics - Chandrothayam Lyrics



M: Budhthan yesu gandhi piranthathu boomiyil 
etharkkaaga thozhaa yezhai namakkaaga,
budhthan yesu gandhi piranthathu boomiyil 
etharkkaaga thozhaa yezhai namakkaaga,
gangai yamunai kaviri vaigai 
oduvathetharkkaaga,
naalum uzhaiththu thaagam eduththa 
thozhargal namakkaaga,
kelvikkuri pol muthugu valainthu 
uzhaippadhu edharkkaaga,
maanam ondre perithena enni pizhaikkum 
namakkaaga,

M: budhthan yesu gandhi piranthathu boomiyil 
etharkkaaga thozhaa yezhai namakkaaga...


M: nizhal vendumbothu maram ondru undu 
pagai vandhapothu thunai ondru undu,
nizhal vendumbothu maram ondru undu 
pagai vandhapothu thunai ondru undu,
irul vandhapothu vilakkondru undu 
ethirgalam ondru ellorkkum undu, 
unmai enbathu endrum ullathu 
deivaththin mozhiyaagum,
nanmai enbathu naalai varuvathu 
nambikkai oliyaagum,

M: budhthan yesu gandhi piranthathu boomiyil 
etharkkaaga thozhaa yezhai namakkaaga...


M: porul konda pergal manam kondathillai 
tharum kaigal thedi porul vandhathillai,
porul konda pergal manam kondathillai 
tharum kaigal thedi porul vandhathillai,
manam endra koyil thirakkindra neram 
azhaikkaamal ange deivam vandhu serum, 
azhuthavar siriththathum sirippavar 
azhuthathum vidhi vazhi vandhathillai,
oruvarukkendre ullathai ellaam iraivanum 
thandhathillai,

M: budhthan yesu gandhi piranthathu boomiyil 
etharkkaaga thozhaa yezhai namakkaaga,
gangai yamunai kaviri vaigai 
oduvathetharkkaaga,
naalum uzhaiththu thaagam eduththa 
thozhargal namakkaaga,

M: budhthan yesu gandhi piranthathu boomiyil 
etharkkaaga thozhaa yezhai namakkaaga...

------------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் 
எதற்க்காக தோழா ஏழை நமக்காக,
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் 
எதற்க்காக தோழா ஏழை நமக்காக,
கங்கை யமுனை காவிரி வைகை
ஒடுவதெதர்க்காக,
நாளும் உழைத்து தாகம் எடுத்த 
தோழர்கள் நமக்காக,
கேள்விகுறி போல் முதுகு வளைந்து 
உழைப்பது எதற்க்காக,
மானம் ஒன்றே பெரிதென எண்ணி 
பிழைக்கும் நமக்காக,

ஆ: புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் 
எதற்க்காக தோழா ஏழை நமக்காக....


ஆ: நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு,
நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு,
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு,
உண்மை என்பது என்றும் உள்ளது 
தெய்வத்தின் மொழியாகும்,
நன்மை என்பது நாளை வருவது 
நம்பிக்கை ஒளியாகும்,

ஆ: புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் 
எதற்க்காக தோழா ஏழை நமக்காக....


ஆ: பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை,
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை,
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்,
அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை,
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் 
இறைவனும் தந்ததில்லை,

ஆ: புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் 
எதற்க்காக தோழா ஏழை நமக்காக,
கங்கை யமுனை காவிரி வைகை
ஒடுவதெதர்க்காக,
நாளும் உழைத்து தாகம் எடுத்த 
தோழர்கள் நமக்காக,

ஆ: புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் 
எதற்க்காக தோழா ஏழை நமக்காக....