Kaatre Kaatre Un Moonkil - J.C.Daniel Movie

                           
 ஆ: காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில்
கீதம் இசைப்பதென்ன,
கீதம் இசைப்பதென்ன,
வேனிற் காலங்கலும் வேனு கானமும்
தோகை விரிப்பதென்ன
தோகை விரிப்பதென்ன,


பெ: மேகம் மேகம் அது போகும் வழிகளில்
நெஞ்சம் மிதப்பதென்ன,
பூட்டி வைத்த ஒரு பூவின் கதவுகள்
காற்றில் திறப்பதென்ன
காற்றில் திறப்பதென்ன,



ஆ: நேற்று என்பது வெறும் கனவு
இன்று என்பது புது நினைவு
சோகம் சுமந்த தோள்களிலே
சாய்ந்திட வருதே வெண்ணிலவு,
முட்டி முட்டி பால் குடிக்கும்
கன்னுக்குட்டி செல்லங்களும்,
குட்டி குட்டி பூக்களிலே தொட்டில்
கட்டும் தென்றல்களும்,
காதில் தேன்மொழி சொல்கிறதே,
காற்றே காற்றேயே.............

பெ:  காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில்
கீதம் இசைப்பதென்ன,
வேனிற் காலங்கலும் வேனு கானமும்
தோகை விரிப்பதென்ன
தோகை விரிப்பதென்ன,
பெ: ஆ...ஆ...ஆ....ஆ...ஆ.....ஆ...

ஆ; அழகிய வானம் திறக்கிறது
ஆயிரம் கிளிகள் பறக்கிறது,
பழகிய கிளிகள்  கிழக்கினிலே
வானவில் ஒன்று வரைகிறது,
மின்மினியின்  கண்களிலே
நட்சத்திரம் பூக்கிறதே,
கிண்கிணியின் சந்தங்களில்
கீர்த்தனங்கள் கேட்கிறதே,
நேரம் வந்தது பூவாக....

ஆ; காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில்
கீதம் இசைப்பதென்ன,
வேனிற் காலங்கலும் வேனு கானமும்
தோகை விரிப்பதென்ன,

பெ: மேகம் மேகம் அது போகும் வழிகளில்
நெஞ்சம் மிதப்பதென்ன,
பூட்டி வைத்த ஒரு பூவின் கதவுகள்
காற்றில் திறப்பதென்ன
காற்றில் திறப்பதென்ன,

ஆ: தோகை விரிப்பதென்ன,
தோகை விரிப்பதென்ன......