Aanandh yaazhai Lyrics - Thanga_Meenkal Lyrics



M: Magalgalai petra appaakkalukku
mattumthaan theriyum
muththam kaamathil serndhadhillai endru…
 
Aanandh yaazhai meettugiraai adi
nenjil vannam theettugiraai
anbennum koodaiyai neettugiraai
adhil aayiram mazhaithuli koottugiraai
iru nenjam inaindhu pesida ulagil
bashaigal edhuvum thevaiyillai
siru pullil urangum paniyil theriyum
mazhaiyin azhago thaangavillai
undhan kaigal pidithu poagum vazhi
adhu poadhavillai innum vendumadi
indha mannil idhupoal yaarumingey
engum vaazhavillai endru thondruthadi   (Aanandha)
 
Thoorathu marangal paarkkudhadi
dhevathai ivala ketkudhadi
thannilai marandhu pookkudhadi
kaatrinil vaasam thookkudhadi
adi koyil edharku dheivangal edharku
unadhu punnagai poadhumadi
 
Indha mannil idhupoal yaarumingey
engum vaazhavillai endru thoandruthadi   (Aanandha)
 
Unmugam paarthaal thoanudhadi
vaanathu nilavu sinnadhadi
megathil maraindhey paakkudhadi
unnidam velicham ketkudhadi
adhai kaiyil pidithu aarudhal uraithu
veettukku anuppu nallabadi
 
Indha mannil idhupol yaarumingey
engum vaazhavillai endru thoandrudhadi   (Aanandha)

--------------------------------------------------------------------------------------------------

பெ மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு  
மட்டும்தான் தெரியும்  
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று…
 
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் கூடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மழையின் அழகோ தாங்கில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி   (ஆனந்த)
 
தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவள கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
 
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி   (ஆனந்த)
 
உன்முகம் பார்த்தால் தோனுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பாக்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
 
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி   (ஆனந்த)