Odi Odi nee ozhinjaalum Lyrics - Poojai Lyrics


M: Aa……. thum thananaa…………….
Odi Odi nee ozhinjaalum odhungi odhungi nee marainjaalum
thedi thedi thaan unnai thodarum thevai indha yuththam
poadhum poadhum ena poruthaalum  
theeru theerum ena thaduthaalum
thaagam kondu thaan thegam engum koabam pongum yuththam
pallaandu kaalam mannil theeraadha vanjam
seththaalum manidhan nenjil saayaadhu vanmam
vera vazhiye illa poojai onnu poada poareney
oru thunaiye venaam thannandhaniyaai moadha poareney
Oraayiram eettiyaai seerippaayum neram   (Odi…)
 
M: Thedi thedi kaalgal engo poagudhey  
manam vaadi vaadi konjam yedho thedudhey
idhu kaattukkulley aadum kannaamboochi thaan
ada maattikkichu ingey pattaamboochi thaan  
thaniyaagi oru maanai thediye nee Odum Ottam
ada maarum un ennam engilum veeno oru vaattam
kanneeraai neeyum sindhakkoodaadhu  
kandaaley poadhum thunbam thodaraadhu
vaazhavacha dheivam vittu poanadhey
adhai ariyaadha indha nenjam vikki poagudhey
ada aalamaram onnu saanju kidakkudhey  
adhai yaaru vandhu solla saabamirukkey
kalangaadhey idhu kadavul soadhanai kaanaamal poagum
padharaadhey nee meendu vandhadhum  
paththu thalaimurai pesum
vaadaadhey boomi vidiyaadhaa thaa  
poadaa po unnaal mudiyaadhadhaa
vera vazhiye illa poojai onnu poada poareney
oru thunaiye venaam thannandhaniyaai moadha poareney
Oraayiram eettiyaai seerippaayum nearam  (Poadhum)

--------------------------------------------------------------------------------------------------------

ஆ: ஆ…… தும் தன்னா…………
ஓடி ஓடி நீ ஒழிஞ்சாலும் ஒதுங்கி ஒதுங்கி நீ மறஞ்சாலும்
தேடி தேடி தான் உன்னை தொடரும் தேவை இந்த யுத்தம்
போதும் போதும் என பொருத்தாலும் தீரும் தீரும் என தடுத்தாலும்
தாகதம் கொண்டு தான் தேகம் எங்கும் கோபம் பொங்கும் யுத்தம்
பல்லாண்டு காலம் மண்ணில் தீராத வஞ்சம்
செத்தாலும் மனிதன் நெஞ்சில் சாயாது வன்மம்
வேற வழியே இல்ல பூஜை ஒன்னு போடபோறேனே
ஒரு துணையே வேணாம் தன்னந்தனியாய் மோத போறேனே
ஓராயிரம் ஈட்டியாய் சீறிப்பாயும் நேரம் (ஓடி…)
 
ஆ: தேடி தேடி கால்கள் எங்கோ போகுதே  
மனம் வாடி வாடி கொஞ்சம் ஏதோ தேடுதே
இது காட்டுக்குள்ளே ஆடும் கண்ணாம்பூச்சி தான்
அட மாட்டிக்கிச்சு இங்கே பட்டாம்பூச்சி தான்
தனியாகி ஒரு மானை தேடியே நீ ஓடும் ஓட்டம்
அட மாறும் உன் எண்ணம் எங்கிலும் வீனோ ஒரு வாட்டம்
கண்ணீராய் நீயும் சிந்தக்கூடாது கண்டாலே போதும்
துன்பம் தொடராது
வாழவச்ச தெய்வம் விட்டு போனதே
அதை அறியாத இந்த நெஞ்சம் விக்கி போகுதே
அட ஆலமரம் ஒன்னுசாஞ்சு கிடக்குதே  
அதை யாரு வந்து சொல்ல சாபமிருக்கே
கலங்காதே இது கடவுள் சோதனை காணாமல் போகும்
பதறாதே நீ மீண்டு வந்ததும் பத்து தலைமுறை பேசும்
வாடாதே பூமி விடியாதா தா போடா போ உன்னால் முடியாததா
வேற வழியே இல்ல பூஜை ஒன்னு போடபோறேனே  
ஒரு துணையே வேணாம் தன்னந்தனியாய் மோத போறேனே
ஓராயிரம் ஈட்டியாய் சீறிப்பாயும் நேரம் (போதும்)