Sempoove Poove Lyrics - Siraichalai Lyrics



M: sempoove poove un megam naan vanthaal oru vazhiyundo...

F: saainthaadum sangil thuli pattalum muththagidum mottunde...

M: padai kondu nadakkum manmatha silaiyo...oh...

F: mannavan viralgal pallavan uliyo....oh...

M: imaigalum udhadugal aagumo...

F: vetkaththin vidumurai aayulin varai thaano... (sempoove)


M: anthi chooriyanum kundril saaya
megam vanthu kachchai aaha
kaaman thangum moga poovil muththa kummaalam

F: thanga thingal netri pottum ittu
vennilaavin kannam thottu
nenjilaadum swasa choottil kaadhal kutraalam

M: then thelikkum thendralaai ninnarugil vanthu naan
selai nathi oramaai neenthi vilaiyaadavaa..

F: naalum minnal konjum thaazhampoovai solli

M: aasai kenikkulle aadum meengal thulli

F: pattilum kaalvali kollaatho
kaivalai kaigalai keeriyatho... (sempoove)


F: intha thaamaraippoo theeyil indru
kaaththirukku ullam nonthu
kangal ennum thoondil thumbi paadi chellaaatho

M: antha kaaman ambu ennai suttu
paavai nenjin naanam suttu
megalaiyin noolarukkum selai ponpoove...

F: minniyathu thaamarai vandu thodum naalilaa
paavaimayal saayithey mannan mani maarbilo..

M: muththathaale penne selai neiven kanne

F: naanathalor aadai soodikkolven naane

M: thaayaagum vazhi sollaathey panjanai puthaiyalin ragasiyame...
(saainthaadum)

-------------------------------------------------------------------------------------------------------

ஆ: செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ ...

பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் மொட்டுண்டே ...

ஆ: படை கொண்டு நடக்கும் மன்மத சிலையோ ...ஒ ...

பெ; மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ....ஒ ...

ஆ: இமைகளும் உதடுகள் ஆகுமோ ...

பெ: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரை தானோ (செம்பூவே )


ஆ: அந்தி சூரியனும் குன்றில் சாய
மேன் வந்து கச்சை ஆஹா
காமன் தாங்கும் மோக பூவில் முத்த கும்மாளம்

பெ: தங்க திங்கள் நெற்றி பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம்

ஆ: தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா ..

பெ: நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவை சொல்லி

ஆ: ஆசை கேநிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி

பெ: பாட்டிலும் கால்வலி கொள்ளாதோ
கைவளை கைகளை கீரியதோ ... (செம்பூவே)


பெ: இந்த தாமரைப்பூ தீயில் இன்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் தூண்டில் தும்பி பாடிச் செல்லாதோ

ஆ: அந்த காமன் அம்பு என்னை சுட்டு
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலருக்கும் சேலை பொன்பூவே ...

பெ: மின்னியது தாமரை வண்டு தொடும் நாளிலா
பாவைமயல் சாயுதே மன்னன் மணி மார்பிலோ ..

ஆ: முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே

பெ: நாணதலோர் ஆடை சூடிக்கொல்வேன் நானே

ஆ: தாயாகும் வழி சொல்லாதே பஞ்சனை புதையலின் ரகசியமே.....

(சாய்ந்தாடும்)