vaazhve maayam Lyrics - vaazhve maayam Lyrics



M: vaazhve maayam indha vaazhvae maayam
tharai meedhu kaanum yaavum thanneeril podum kolam nilaikkaadhammaa...
yaaroadu yaar vandhathu? naam pogumpothu
yaaroadu yaar selvathu?

(vaazhvae)

M: yaaraarkku entha vesamo inge yaaraarkku enna medaiyo...
aadum varai koottam varum aattam ninraal ottam vidum
thaayaale vandhathu theeyaale vendhathu (2)
mei endru meniyai yaar sonnathu...

(vaazhvae)

m: pirandhaalum paalai ootruvaar inge iranthaalum paalai ootruvaar
undaavathu rendaalathaan oorpovathu naalaaladhaan
karuvoadu vandhadhu theruvoadu poavadhu (2)
mei endru meniyai yaar sonnathu...

(vaazhvae)

M: naadagam vidum neramthaan uchcha kaatchi nadakkuthammaa
vesham kalaikkavum oivu edukkavum velai nerungathammaa
paadhaigal pala maariye vantha payanam mudiyuthammaa
thaai kondu vandhathai thaalaatti vaiththathai
noi kondu pogum neramammaa....

----------------------------------------------------------------------------------------------------------

ஆ: வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்!
நிலைக்காதம்மா...!
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது,
யாரோடு யார் செல்வது?

(வாழ்வே...........)

ஆ: யாரார்க்கு என்ன வேஷமோ? இங்கே 
யாரார்க்கு எந்த மேடையோ?
ஆடும் வரைக் கூட்டம் வரும், 
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?

(வாழ்வே...........)

ஆ: பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே 
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்!
ஊர்போவது நாலாலதான்!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?

(வாழ்வே...........)

ஆ: நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா!
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா!
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா!
தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை,
நோய் கொண்டு போகும் நேரமம்மா!....