Pichchai paaththiram Lyrics - Naan Kadavul Lyrics

M: Pichchai paaththiram yenthivanthen aiyane en aiyaane
yaam oru pichchai paaththiram yenthivanthen aiyane en aiyane
pindam ennum elumbodu sathai narambuthiramum adangiya
udambu enum....
pichchai paaththiram yenthi vanthen
aiyane en aiyane 
pindam ennum elumbodu sathai naramputhiramum adangiya
udambu enum.... (Pichchai)
 
M: Ammaiyum appanum thandhathaa
illai viyadhiyin valvinai soozhndhathaa
ammaiyum appanum thandhathaa
illai viyadhiyin valvinai soozhndhathaa
inmaiyai naan ariyaadhthaal  
inmaiyai naan ariyaadhthaal  
siru bommaiyinil unmaiyai unarnthida...
pichchai paaththiram yenthi vanthen
aiyane en aiyane (Pichchai)
 
M: Aththanai selvamum unnidathil  
naan pichchaikku selvadhu evvidathil
aththanai selvamum unnidathil  
naan pichchaikku selvadhu evvidathil
 
Verum paaththiram ullathu ennidathil
adhan sooththiram athu unnidaththil
oru muraiyaa irumuraiyaa
pala murai pala pirappedukkavaiththaai
pudhu vinaiyaa pazhavinaiyaa
ganam ganam dhinam dhinam enai kudikkavaiththaai
porulukku alaindhirum porulatra 
vaazhkkaiyum thurathuthey
un arul arul arul endru  
alaigindra manam indru pithatturuthey
arul vizhiyaal nokkuvaai
malar pathaththaal thaanguvaai
un thirukkaram enai anaiththunadharul pera
pichcha paaththiram yenthi vanthen aiyane en aiyane
pindam ennum elumpodu sathai naramputhiramum adangiya
udambu enum....(Pichchai)

---------------------------------------------------------------------------------------------

ஆ: பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய
உடம்பு எனும் பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய
உடம்பு எனும் பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே (பிச்சைப்பாத்திரம்)
 
ஆ: அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை வியாதியின் வல்வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை வியாதியின் வல்வினை சூழ்ந்ததா
இன்மையை நான் அறியாததால்
இன்மையை நான் அறியாததால்
சிறு பொம்மையினில் உண்மையை உணர்ந்திட...
பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் 
அய்யனே என் அய்யனே... (பிச்சைப்பாத்திரம்)
 
ஆ: அத்தனை செல்வமும் உன்னிடத்தில்  
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்  
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமே யது உன்னிடத்தில்
ஒரு முறையா இருமுறையா
பல முறை பல பிறப்பெடுக்கவைத்தாய்
புது வினையா பழவினையா
கனம் கனம் தினம் எனைக் குடிக்கவைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும்
துறத்துதே உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அனைத்துனதருள் பெற
பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய
உடம்பு எனும் பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே (பிச்சைப் பாத்திரம்)